பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி: நாடு முழுவதும் சிறப்பு ஏற்பாடு, 4 லட்சம் இடங்களில் ஒலிபரப்பு


பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி: நாடு முழுவதும் சிறப்பு ஏற்பாடு,  4 லட்சம் இடங்களில் ஒலிபரப்பு
x

பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியை மக்கள் கேட்பதற்காக நாடு முழுவதும் 4 லட்சம் இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது

புதுடெல்லி,

நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு மனதின் குரல் (மன் கி பாத்) என்ற பெயரில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ந்தேதி முதல் மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக ரேடியோவில் பேசி வருகிறார். தனது உரையின்போது அந்த மாதம் நடைபெறும் நிகழ்வுகள், சாதனைகள், தனி நபரின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நாட்டு மக்களிடம் அவர் பகிர்ந்து கொள்வார்.

மேலும் மனதின் குரல் குறித்து நாட்டு மக்களிடம் கருத்துக்களையும் கேட்டு அதற்கு ஏற்ற வகையிலும் உரையாடி வருகிறார். பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வர வேற்பை பெற்றது. பிரதமர் மோடி பெருமிதம் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் அவரது வானொலி உரையை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பு செய்யப்பட்டது. காலை 11 மணி முதல் 11.30 மணி வரை அவரது மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பானது. 100-வது அத்தியாயம் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

அவர் இந்தியில் உரையாற்றியது 22 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நாடு முழுவதும் மக்கள் கேட்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதோடு ஆங்கிலம் உள்ளிட்ட 12 வெளிநாட்டு மொழிகளிலும் ஒலிபரப்பானது. பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் 100-வது அத்தியாயத்தையொட்டி விசேஷ கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியை மக்கள் கேட்பதற்காக நாடு முழுவதும் 4 லட்சம் இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியை நாடு முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் கேட்ட னர். இந்த நிகழ்ச்சி 3 தனியார் பண்பலை உள்பட ஆயிரம் வானொலி நிலையங்கள் மற்றும் பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.


Next Story