தலைநகர் டெல்லியில் இன்று மிகவும் மோசமடைந்த காற்றின் தரம்..!


தலைநகர் டெல்லியில் இன்று மிகவும் மோசமடைந்த காற்றின் தரம்..!
x
தினத்தந்தி 22 Oct 2023 1:58 PM GMT (Updated: 22 Oct 2023 1:59 PM GMT)

டெல்லியில் இன்று காற்றின் தரம் மிகவும் மோசமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது. இதனிடையே குளிர்காலம் நெருங்கி வரும் சூழலில், டெல்லி போன்ற பெருநகரங்களில் காற்றின் தரம் மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் டெல்லியில் இன்று காற்றின் தரக் குறியீடு (AQI) 306 ஆக பதிவாகியுள்ளதாக 'காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பிற்கான ஆராய்ச்சி மையம்' (SAFAR) தெரிவித்துள்ளது. அதே போல் குருகிராம் பகுதியில் காற்றின் தரக்குறியீடு 283 ஆகவும், நொய்டாவில் 308 ஆகவும் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story