அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது


அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது
x

அமர்நாத் புனித யாத்திரை நேற்று தொடங்கியது.

ஜம்மு,

காஷ்மீரில் புகழ்பெற்ற அமர்நாத் புனித யாத்திரை, கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாதநிலையில் இந்த ஆண்டு நடைபெறுகிறது.

இந்நிலையில் அமர்நாத் குகைக் கோவிலுக்குச் செல்லும் முதலாவது குழுவின் பயணத்தை காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா நேற்று தொடங்கிவைத்தார்.

ஜம்மு நகரில் உள்ள பகவதிநகர் முகாமில் இருந்து புறப்பட்ட 4 ஆயிரத்து 890 பக்தர்களின் 176 வாகனங்களை அவர் கொடியசைத்து தொடங்கினார். பகல்காம் மற்றும் பதால் அடிவார முகாம்களை அடையும் அந்த பக்தர்கள் குழுவினர், அங்கிருந்து தங்கள் 43 நாள் புனித யாத்திரையை இன்று (வியாழக்கிழமை) தொடங்குவார்கள்.

வருகிற ஆகஸ்டு 11-ந் தேதி ரக்ஷா பந்தன் தினத்தன்று இந்த யாத்திரை நிறைவுபெறும். இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரைக்கு 3 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பதிவு செய்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த யாத்திரையையொட்டி காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Next Story