டெல்லியில் "கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளுக்கு மூடி சீல் வைக்கப்படும்" - டெல்லி மந்திரி


டெல்லியில் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளுக்கு மூடி சீல் வைக்கப்படும் - டெல்லி மந்திரி
x

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நபர் இன்று பிற்பகல் 3 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டார்.

புதுடெல்லி,

டெல்லியில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் 40 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த இளைஞர் இன்று பிற்பகல் 3 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டார். ஆழ்துளை கிணற்றில் அதிகாலை விழுந்த இளைஞரை மீட்க தேசியப்பேரிடர் மீட்பு படை 12 மணி நேரமாக மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்தநிலையில், டெல்லியில் உள்ள கைவிடப்பட்ட அனைத்து ஆழ்துளை கிணறுகளும் 48 மணி நேரத்தில் மூடி சீல் வைக்கப்படும் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து, டெல்லி மந்திரி அதிஷி, தலைமைச் செயலாளர் நரேஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார்களால் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தும் உடனடியாக சீல் வைக்கப்பட்டு, 48 மணி நேரத்திற்குள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.


Next Story