காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட வங்கி ஊழியர் குடும்பத்தினருக்கு நிதியுதவி - எஸ்.பி.ஐ அறிவிப்பு


காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட வங்கி ஊழியர் குடும்பத்தினருக்கு நிதியுதவி - எஸ்.பி.ஐ அறிவிப்பு
x

காஷ்மீரில் பாரத ஸ்டேட் வங்கி நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் வங்கி ஊழியர் கொல்லப்பட்டதுக்கு எஸ்.பி.ஐ இரங்கல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

காஷ்மீரில் வங்கி ஊழியராகப் பணியாற்றி வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.சுட்டுக்கொல்லப்பட்ட நபர் ராஜஸ்தான் மாநிலம், ஹனுமன்கர் பகுதியைச் சேர்ந்த விஜய்குமார் என்று தெரிய வந்திருக்கிறது. இவர் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்திலிருக்கும் 'எல்லாக்கி தெஹாதி வங்கியில்' மேலாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் பயங்கரவாதிகள் எதிர்பாராத நேரத்தில் வங்கிக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் படுகாயமடைந்த விஜய்குமார், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

எஸ்பிஐ நிதியுதவியுடன் ஸ்ரீநகரைத் தலைமையிடமாகக் கொண்டு கிராமப்புற வங்கியான 'எல்லாக்கி தெஹாதி வங்கி' இயங்கி வருகிறது.

இதனையடுத்து, பாரத ஸ்டேட் வங்கி(எஸ்.பி.ஐ), காஷ்மீரில் கொல்லப்பட்ட ஊழியருக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. அவருடைய குடும்பத்தினருக்கு தேவையான நிதியுதவி அல்லது பிற வாழ்வாதார உதவிகளை கிடைக்க உறுதி செய்யும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பாக, எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளதாவது, காஷ்மீர் பள்ளத்தாக்கில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் உட்பட, அனைத்து பகுதியில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த எஸ்பிஐ உறுதியுடன் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

.


Next Story