சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை


சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 25 Sept 2022 12:45 PM IST (Updated: 25 Sept 2022 12:45 PM IST)
t-max-icont-min-icon

சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

மங்களூரு;

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா கொக்கடா கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபா. தொழிலாளி. அதேப்பகுதியில் சிறுமி ஒருவள் தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். இந்த நிலையில் பள்ளிக்கு சென்று வந்த சிறுமியை, பத்மநாபா ஆசைவார்த்தை கூறி தனது வீட்டுக்கு அழைத்து சென்று வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் இதுகுறித்து வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி, தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளாள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுபற்றி தர்மஸ்தலா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பத்மநாபாவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை மங்களூரு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அப்போது பத்மநாபா மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.


Next Story