பெங்களூருவில் டோயிங் வாகனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து அரசு 6 வாரங்களில் முடிவு எடுக்க வேண்டும்; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


பெங்களூருவில் டோயிங் வாகனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து அரசு 6 வாரங்களில் முடிவு எடுக்க வேண்டும்; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x

பெங்களூருவில் டோயிங் வாகனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து அரசு 6 வாரங்களில் முடிவு எடுக்க வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

பெங்களூருவில் தடை செய்யப்பட்டுள்ள இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை டோயிங் வாகனங்கள் மூலமாக போக்குவரத்து போலீசார் தூக்கி செல்வதுடன், அபராதமும் விதித்து வந்தனர். ஆனால் பெங்களூருவில் வாகனங்களை டோயிங் செய்வதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக பெங்களூருவில் தடை செய்யப்பட்டுள்ள இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை டோயிங் செய்வதற்கு அரசு தடை செய்திருந்தது. இந்த நிலையில், பெங்களூருவில் டோயிங் செய்யவும், டோயிங் வாகனங்களுக்கு அனுமதி வழங்க உத்தரவிட கோரியும், கர்நாடக ஐகோர்ட்டில் டோயிங் வாகன உரிமையாளர்கள், அந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்சித் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது டோயிங் வாகன உரிமையாளர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், பெங்களூருவில் டோயிங் வாகனங்களுக்கு அனுமதி வழங்கும்படி அரசுக்கு பல முறை கடிதம் எழுதியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை நம்பி வாழ்ந்தவர்கள் மிகவும் கஷ்டபடுகிறார்கள் என்றார். இதையடுத்து, பெங்களூருவில் டோயிங் வாகனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து 6 வாரங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று அரசுக்கு, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்சித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story