முதல்-மந்திரி பதவியில் அமர நினைக்கும் டி.கே.சிவக்குமாரின் பேராசை நடக்காது


முதல்-மந்திரி பதவியில் அமர நினைக்கும் டி.கே.சிவக்குமாரின் பேராசை நடக்காது
x
தினத்தந்தி 28 March 2023 10:00 AM IST (Updated: 28 March 2023 10:04 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி பதவியில் அமர நினைக்கும் டி.கே.சிவக்குமாரின் பேராசை நடக்காது என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ. கூறினார்.

சிக்கமகளூரு-

முதல்-மந்திரி பதவியில் அமர நினைக்கும் டி.கே.சிவக்குமாரின் பேராசை நடக்காது என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ. கூறினார்.

சி.டி.ரவி எம்.எல்.ஏ.

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவரான டி.கே.சிவக்குமார் நேற்று முன்தினம் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பா.ஜனதா தேசிய தலைவரான சி.டி.ரவி எம்.எல்.ஏ.வை கடுமையாக விமர்சித்து பேசினார். 'சி.டி.ரவி இந்த முறை தேர்தலில் தோல்வி அடைவார். அவர் தோல்வி அடைவது உறுதி. தோல்வி பயத்தில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார்' என்று கடுமையாக விமர்சித்து பேசினார். இந்த நிலையில் நேற்று சிக்கமகளூருவில் சி.டி.ரவி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

யார் காரணம்

மங்களூருவில் நடந்த குக்கர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும், மந்திரி சுதாகரும் தான் காரணம் என்று டி.கே.சிவக்குமார் சொல்லி வருகிறார். அது முற்றிலும் தவறு. என்னை(சி.டி.ரவி) டி.கே.சிவக்குமார் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். இதனால் நான் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர திட்டமிட்டுள்ளேன். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மீதும், பா.ஜனதாவினர் மீதும் டி.கே.சிவக்குமாரும், டி.கே.சுரேசும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.

டி.கே.சிவக்குமார் எப்படியாவது முதல்-மந்திரியாகி விட வேண்டும் என்று கனவு காண்கிறார். அவரது பேராசை நடக்காது. பா.ஜனதாவினர் சாதி, மத, பாகுபாடு இன்றி அனைத்து இடங்களிலும் வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளனர். அதனால் இந்த முறையும் தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெறுவது உறுதி. டி.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி கலவரத்திற்கு யார் காரணம் என்று மக்களுக்கு நன்றாக தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story