சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெறும்
சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெறும் மந்திரி அசோக் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
சிக்கமகளூரு-
சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரேயில் வருவாய்த்துறை மந்திரி அசோக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி நான் 50 தொகுதிகளில் விஜய சங்கல்ப யாத்திரை நடத்தி உள்ளேன். செல்லும் இடங்களில் எல்லாம் பா.ஜனதாவுக்கு அமோக ஆதரவு உள்ளது. ஆனால் காங்கிரசாரின் யாத்திரைக்கு மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை. கர்நாடகத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஹாசன், மண்டியா மாவட்டங்களில் தான் செல்வாக்கு உள்ளது.
பின்வரும் நாட்களில் ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஒரு மாவட்டத்தில் கூட ஆதரவு கிடைக்காது. மக்கள் பா.ஜனதாவை ஆதரிக்க தொடங்கிவிட்டனர். சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெறும். சுங்க கட்டணம் விவகாரத்தில் எந்த ஊழலும் நடக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story