மராட்டியத்தில் காவலுக்கு இருந்த நாயை தூக்கி சென்ற சிறுத்தைப்புலி


மராட்டியத்தில் காவலுக்கு இருந்த நாயை தூக்கி சென்ற சிறுத்தைப்புலி
x

மராட்டியத்தில் வீட்டுக்கு வெளியே காவலுக்கு இருந்த வளர்ப்பு நாயை சிறுத்தைப்புலி தூக்கி சென்ற காட்சி சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி உள்ளது.



நாசிக்,



மராட்டியத்தின் நாசிக் நகரில் முங்சாரே கிராமத்தில் வீடு ஒன்றின் வெளியே நள்ளிரவில் வளர்ப்பு நாய் ஒன்று அமர்ந்து காவல் காத்து வந்தது.

அந்த பகுதியில் இரை தேடி சுற்றி திரிந்த சிறுத்தைப்புலி ஒன்று நாயை கண்டதும் பதுங்கியபடி வந்துள்ளது. இதனை கவனித்த நாய் எழுந்து, அதனை நோக்கி குரைத்தபடி தப்பி செல்ல முயன்றுள்ளது.

ஆனால், அந்த பகுதியில் வேறு வழி எதுவும் இல்லை. தவிர, நாயால் விரைவாக ஓடவும் முடியவில்லை. இதனை தொடர்ந்து நாயை சிறுத்தைப்புலி கவ்வி சென்று விட்டது.

இதுபற்றி நாசிக் நகர துணை வன பாதுகாப்பு அதிகாரி பங்கஜ் கார்க் கூறும்போது, முங்சாரே கிராமத்தில் வசிப்பவர்கள் இரவில் வீட்டுக்கு உள்ளேயே இருக்கும்படி கேட்டு கொள்ளப்படுகின்றனர். இந்த பகுதியில் சிறுத்தைப்புலி சுற்றி திரிவது அதிகரித்து உள்ளது. அதனால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.


Next Story