கர்நாடக சட்டசபையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்து வந்த பாதை
கர்நாடக சட்டசபையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்து வந்த பாதையை இங்கே காண்போம்...
கர்நாடகத்தில் முதல் சட்டசபை அமைந்த போது நியமன உறுப்பினர் உள்பட 100 உறுப்பினர்கள் பதவி இருந்தது. அதன் பின்னர் 1953-ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது ஆந்திராவுடன் இருந்த பல்லாரி மாவட்டம் மைசூரு மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. இதனால் சட்டசபையில் மேலும் 5 உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. அதன் பிறகு 1956-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ந்தேதி மராட்டிய மாநிலத்தின் சில பகுதிகள், ஆந்திராவின் சில பகுதிகள், தமிழ்நாட்டின் சில பகுதிகள் மைசூரு மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. 1973-ம் ஆண்டு மைசூரு மாநிலம், கர்நாடகம் என பெயர் சூட்டப்பட்டது.
1956-ம் ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி சட்டசபையின் முதல் கூட்டம் தற்போதைய விதான சவுதாவில் கூடியது. 1957-ம் ஆண்டு சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 216 ஆகவும், 1978-ல் 224 ஆகவும் உயர்த்தப்பட்டது. மேலும் ஒரு நியமன உறுப்பினரையும் (ஆங்கிலோ இந்தியன்) சேர்த்து தற்போது கர்நாடக சட்டசபையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆக உள்ளது.