எஜமானரின் உயிரை காப்பாற்ற பாம்பை கொன்று வளர்ப்பு நாய் இறந்தது


எஜமானரின் உயிரை காப்பாற்ற பாம்பை கொன்று வளர்ப்பு நாய் இறந்தது
x

எஜமானரின் உயிரை காப்பாற்ற பாம்பை கொன்று வளர்ப்பு நாய் இறந்தது

கோலார் தங்கவயல்: கோலார் தாலுகா பீரண்டள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விலாஸ். இவர், தோட்டத்து வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், கியாசி என்ற பெயரில் ஒரு நாய் வளர்த்து வந்தார். இந்த நிலையில் விலாஸ் செல்போன் பார்த்தப்படி வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். நாய் கியாசியும் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளது. அப்போது அங்கு நாகபாம்பு ஒன்று ஊர்ந்து விலாசை நோக்கி வந்துள்ளது. இதைபார்த்த நாய், நாகபாம்பை பிடித்து கடித்து குதறியது. இதனால் பதிலுக்கு நாகபாம்பும் நாயை கடித்துள்ளது. சிறிதுநேரத்தில் பாம்பு துண்டாகி செத்தது.


இதையடுத்து நாய் மயக்கமடைந்து விழுந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த விலாஸ், நாயை மீட்டு அருகே உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றார். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர் நாய் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதைகேட்டு விலாஸ் வேதனை அடைந்தார். இதையடுத்து விலாஸ், நாயின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வீட்டு தோட்டத்தில் புதைத்தார். எஜமானரின் உயிரை காப்பாற்ற பாம்பை கொன்று வளர்ப்பு நாய் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story