'நபிகள் விவகாரம்' - "குற்றம் செய்த யாரையும் விடமாட்டோம்" - யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை
உத்தரபிரதேசத்தில் வன்முறையை தூண்டிய யாரையும் விடமாட்டோம் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லக்னோ,
நூபுர் சர்மா சர்ச்சை பேச்சு காரணமாக உத்தரப் பிரதேசத்தில் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வரும் நிலையில், கலவரத்தை அடக்க மாநில அரசு 'புல்டோசர் நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.
இந்த நிலையில் மாநிலத்தின் பல்வேறு நகரங்களிலும் அமைதியான சூழலை சீர்குலைக்கும் சமூக விரோத சக்திகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், அப்பாவிகள் துன்புறுத்தப்படாமல் இருப்பது உறுதி செய்யப்படும் எனவும், அதேவேளையில் குற்றம் செய்த யாரையும் விட மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story