அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தில் தாக்கல்


அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தில் தாக்கல்
x

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் இன்று தாக்கல் செய்தார்.

புதுடெல்லி,

ஒற்றை தலைமை விவகாரம் அ.தி.மு.க.வில் பூகம்பத்தை கிளப்பிய நிலையில், சென்னையை அடுத்த வானகரத்தில் நேற்று முன்தினம் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக திண்டுக்கல் சீனிவாசன் புதிய பொருளாளராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான ஆவணங்களை டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் இன்று தாக்கல் செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்பித்துள்ளோம். பெரும்பான்மையை பொதுக்குழுவில் நிரூபிக்க வேண்டும் என நீதிமன்றமே ஓ.பன்னீர்செல்வத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் பேசியதாக பரவும் ஆடியோவுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். பொன்னையன் ஆடியோ விவகாரத்தில் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை என்று கூறினார்.


Next Story