ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய நீதிபதி உள்பட 68 நீதிபதிகளின் பதவி உயர்வை நிறுத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு..!


ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய  நீதிபதி உள்பட 68 நீதிபதிகளின் பதவி உயர்வை நிறுத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு..!
x
தினத்தந்தி 12 May 2023 11:59 AM IST (Updated: 12 May 2023 1:48 PM IST)
t-max-icont-min-icon

குஜராத்தில் சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு எச்.எச்.வர்மா உள்ளிட்ட 68 நீதிபதிகளுக்கு சமீபத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டது.

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், மோடி பெயரை பயன்படுத்தி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக குஜராத் மாநில முன்னாள் மந்திரியும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான புர்னேஷ் மோடி தொடுத்த வழக்கை சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு எச்.எச்.வர்மா விசாரித்து, ராகுலுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தார். கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி வெளியான இந்தத் தீர்ப்பினால் ராகுலின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் சூரத் செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இதனிடையே, குஜராத்தில் சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு எச்.எச்.வர்மா உள்ளிட்ட 68 நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்க குஜராத் அரசு பரிந்துரை செய்தது. எச்.எச்.வர்மா உள்ளிட்ட 68 பேரின் பதவி உயர்வையும் எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எம்.ஆர்.ஷா, ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் நடைபெற்று வந்தது.

இந்த மனு விசாரனையில் இருக்கும்போது, குஜராத் அரசு அன்மையில் எச்.எச். வர்மா உள்ளிட்ட 68 நீதிபதிக்கும் பதவி உயர்வு வழங்கியது. இந்த மனு விசாரணையில் இருக்கும்போது இந்த மனு மீது இடைக்கால உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலையில் இருந்தபோதே பதிலளிக்க உத்தரவிட்டிருந்தபோதும், 68 பேருக்கு பதவி உயர்வு குஜராத் அரசு வழங்கியுள்ளது. எனவே, ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய எச்.எச். வர்மா உள்ளிட்ட குஜராத்தின் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் 68 பேரின் பதவி உயர்வை நிறுத்தி வைப்பதாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அவர்கள் ஏற்கெனவே வகித்துவந்த பதவிக்கே செல்லவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. பதவி உயர்வு என்பது தகுதி மற்றும் பணி மூப்பு அடிப்படையில் வழங்கவேண்டும் என்றும், பதவி உயர்வு அளிக்கும் குஜராத் ஐகோர்ட்டின் பரிந்துரை மற்றும் அரசின் அறிவிக்கை சட்டவிரோதமானது என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.


Next Story