1000 முறை மூச்சுப்பயிற்சி செய்தால் ரூ.10,000 பரிசு! தொப்பையை குறைக்க கட்சி பிரமுகருக்கு மம்தா பானர்ஜி யோசனை


1000 முறை மூச்சுப்பயிற்சி செய்தால் ரூ.10,000 பரிசு! தொப்பையை குறைக்க கட்சி பிரமுகருக்கு மம்தா பானர்ஜி யோசனை
x

மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனது கட்சி பிரமுர் ஒருவரிடம் “உங்களுக்கு ஏன் தொப்பை வளர்கிறது? உடற்பயிற்சி செய்றீங்களா? என்று உடல்நலம் குறித்து விசாரித்த சம்பவம் வைரலாகி வருகிறது.

கொல்கத்தா,

மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனது கட்சி பிரமுர் ஒருவரிடம் "உங்களுக்கு ஏன் தொப்பை வளர்கிறது? உடற்பயிற்சி செய்றீங்களா? என்று உடல்நலம் குறித்து விசாரித்த சம்பவம் வைரலாகி வருகிறது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பிரிவுகளின் தலைவர்களுடன் மம்தா பானர்ஜி அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் உள்ளாட்சி அளவிலான நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்திய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

மம்தா பானர்ஜி அவரிடம் கேட்ட கேள்விகள் பின்வருமாறு, "உங்களின் வயிறு எப்படி வளர்கிறது. இப்படி இருந்தால் மயங்கி விழுந்துவிடுவீர்கள். உடல்நலம் சரியில்லையா?" என கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த பிரமுகர், ‛‛நான் நன்றாக இருக்கிறேன். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் என எதுவும் இல்லை'' என கூறினார்.

ஆனால் மம்தா பானர்ஜி விடவில்லை. மாறாக, ‛‛இல்லை. நிச்சயமாக ஏதாவது பிரச்சினை இருக்கும். இல்லாவிட்டால் இவ்வளவு பெரிய தொப்பை வந்திருக்காது.இதற்கு அவர், ‛‛காலையில் பக்கோடி சாப்பிடுகிறேன். இது பழக்கமாக உள்ளது. ஆனால் தினமும் நான் 3 மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறேன். 1000 முறை மூச்சை உள்இழுத்து வெளியே விடும் மூச்சுப்பயிற்சி செய்கிறேன்'' என்றார்.

இதற்கு மம்தா பானர்ஜி, ‛‛நீங்கள் ஏன் தினமும் பக்கோடி சாப்பிடுகிறீர்கள்?. இதை சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்க முடியாது. 1000 முறை மூச்சுப்பயிற்சி செய்கிறீர்களா?. இப்போது என் முன்பு அதை நீங்கள் செய்து காண்பித்தால் ரூ.10 ஆயிரம் தருகிறேன்'' என்றார்.

அதற்கு அவர் "அந்த மூச்சுப்பயிற்சியை காலை மாலையில் தான் செய்ய வேண்டும். மாலை ஆனதும் உங்களுக்காக செய்துகாட்டுகிறேன்" என்றார்.

இதை கேட்ட மம்தா, "பொய் சொல்ல கூடாது. 1000 முறை மூச்சுப்பயிற்சி செய்தால் இவ்வளவு பெரிய தொப்பை வளராது. நீங்கள் அதை சரியாக செய்யவில்லை" என்றார். இதைக்கேட்டு மற்றவர்கள் சிரிக்க தொடங்கினர்.


Next Story