பிரதமர் மோடி கடின உழைப்பாளி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை - குலாம் நபி ஆசாத்


பிரதமர் மோடி கடின உழைப்பாளி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை - குலாம் நபி ஆசாத்
x

பிரதமர் மோடி கடின உழைப்பாளி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று குலாம் நபி ஆசாத் கூறினார்.

புதுடெல்லி,

முன்னாள் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பிரதமர் மோடி எப்போதும் ஒரு அரசியல்வாதியைப் போலவே நடந்து கொள்வார். பிரதமர் மோடி ஒரு நல்ல பிரதமராக இருப்பதாக தான் கருதுகிறேன். பாஜகவை விமர்சிக்கிறேன், ஆனால் நான் பிரதமர் மோடியை தவறாக பேசவில்லை.

பிரதமர் கடின உழைப்பாளி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால் பாஜகவை பாராட்டுகிறோம், விமர்சிக்கிறோம். மற்ற கட்சிகளுக்கு அரசியல் இடம் கொடுக்காவிட்டால், காங்கிரஸுக்கு நேர்ந்த கதியை பாஜகவும் சந்திக்கும்.

காங்கிரஸ் தனது தவறுகளை திருத்திக் கொள்ளும் என்று நான் நம்புகிறேன். காங்கிரஸ் ஒரு தேசிய கட்சியின் பங்கை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story