"நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பேச்சு சுதந்திரம் இல்லை" - கார்கே விமர்சனம்


நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பேச்சு சுதந்திரம் இல்லை - கார்கே விமர்சனம்
x

நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியிலும் பேச்சு சுதந்திரம் கிடையாது. யாராவது உண்மையைப் பேசினாலோ, அதைப் பற்றி எழுதினாலோ அவர்களை சிறைக்கு அனுப்புகிறார்கள்

ராஞ்சி ,

ஜார்க்கண்ட் மாநிலம்,சாகேப்கஞ்ச் மாவட்டம் பாகூரில் காங்கிரஸ் கட்சியின் இந்த பிரசார பயணத்தை கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் பேசிய கார்கே,

பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாக சாடியதுடன், நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லை என்று குற்றம் சாட்டினார். அவர் பேசியதாவது:

நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியிலும் பேச்சு சுதந்திரம் கிடையாது. யாராவது உண்மையைப் பேசினாலோ, அதைப் பற்றி எழுதினாலோ அவர்களை சிறைக்கு அனுப்புகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடியின் நண்பரான அதானியின் சொத்து மதிப்பு 2019ல் ரூ.1 லட்சம் கோடியாக இருந்தது. இப்போது, 13 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

பிரதமர் அதானிக்காக பணியாற்றுகிறார், ஏழை மக்களுக்காக அல்ல. அதானி குழுமத்திற்கு எல்ஐசி ரூ.16,000 கோடியும், பாரத ஸ்டேட் வங்கி ரூ.82,000 கோடியும் வழங்கி உள்ளது. இந்த விஷயத்தை ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் எழுப்பினார். அது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story