கடும் நிதி நெருக்கடி சூழலிலும் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது: டி.ஆர்.பாலு எம்.பி விமர்சனம்


கடும் நிதி நெருக்கடி சூழலிலும் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது: டி.ஆர்.பாலு எம்.பி விமர்சனம்
x

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் எந்த சிறப்பும் இல்லை என்று திமுக எம்.பி டி.ஆர் .பாலு தெரிவித்தார்.

சென்னை,

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாறு குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. ஏனெனில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நாளை முதல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று மக்களவையில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர். பாலு, '1962 முதல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக முக்கிய அங்கம் வகித்துள்ளது. இந்த சிறப்புக் கூட்டத்தொடரில் எந்த சிறப்புகளும் இல்லை.

நாட்டில் கடும் நிதி நெருக்கடி இருக்கும் சூழ்நிலையில் அதிக செலவு செய்து புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான இறுதி கூட்டத்தொடரை இங்கு நடத்தலாமே? நல்ல நாள், நல்ல நேரத்தைவிட, மக்களுக்கு தேவையான நல்ல விவாதங்கள் இருக்க வேண்டும். 75 ஆண்டு கால நாடாளுமன்ற வரலாற்றில் திமுக உள்ளிட்ட பல மாநில கட்சிகளுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. ஜனநாயகத்திற்கு புறம்பான சில மசோதாக்களை நிறைவேற்றவே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. காஷ்மீர், மணிப்பூர், தமிழ்நாடு உள்பட எந்த மாநிலத்துக்கும் பா.ஜ.க அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை' என்று பேசினார்.


Related Tags :
Next Story