சினிமா பாணியில் வங்கிக்குள் சுரங்கம் தோண்டி ரூ. 1 கோடி தங்கத்தை கொள்ளையடித்த கும்பல்...!


சினிமா பாணியில் வங்கிக்குள் சுரங்கம் தோண்டி ரூ. 1 கோடி தங்கத்தை கொள்ளையடித்த கும்பல்...!
x

வங்கிக்குள் வெளியே இருந்து சுரங்கத்தை தோண்டி பணம், நகை வைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் கொள்ளை கும்பல் நுழந்தது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் பஹ்தி பகுதியில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி உள்ளது.

இந்த வங்கியை இன்று காலை ஊழியர்கள் வழக்கம்போல திறந்து பணிக்கு வந்துள்ளனர். அப்போது, வங்கியின் பணம், நகை பெட்டகம் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் சுரங்கம் தோண்டி கொள்ளையர்கள் நுழைந்துள்ளது தெரியவந்தது. மேலும், வங்கியில் இருந்த 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.8 கிலோ தங்கத்தையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் வங்கிக்குள் வந்த போலீசார் விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.

பஹ்தி பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கு பின் பகுதியில் உள்ள திறந்தநிலை நிலத்தில் இருந்து 10 அடி நீளத்திற்கு பள்ளம் தோண்டி வங்கியின் பணம், நகை வைத்திருக்கும் அறைக்குள் நுழைந்துள்ளனர்.

அங்கு வைக்கப்பட்டிருந்த 1.8 கிலோ தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். அதேவேளை, 32 லட்ச ரூபாய் பணம் வைத்திருந்த லாக்கரை உடைக்க முடியாததால் அதை விட்டுவிட்டு சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.8 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், வங்கியில் கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


Next Story