அரசுத் துறைகளில் முப்பது லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது ஏன்? - மல்லிகார்ஜூன கார்கே கேள்வி


அரசுத் துறைகளில் முப்பது லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது ஏன்? - மல்லிகார்ஜூன கார்கே கேள்வி
x
தினத்தந்தி 18 Nov 2022 10:44 AM GMT (Updated: 18 Nov 2022 10:45 AM GMT)

அரசு துறைகளில் முப்பது லட்சம் காலி பணியிடங்கள் இருக்க 75 ஆயிரம் பேருக்கு மட்டுமே நியமன கடிதங்களை பிரதமர் வழங்கி உள்ளார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

அரசுத் துறைகளில் முப்பது லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்க 75 ஆயிரம் பேருக்கு மட்டுமே நியமன கடிதங்களை பிரதமர் மோடி வழங்கி உள்ளார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

"பிரதமர் மோடி ஆண்டுதோறும் 2 கோடி வேலைகள் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

அதன்படி, 8 ஆண்டுகளில், 16 கோடி வேலைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

பல்வேறு அரசுத் துறைகளில் 30 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஆனால் பிரதமர் மோடி 75 ஆயிரம் நியமனக் கடிதங்களை தான் வழங்கி உள்ளார்.

மத்திய செயலக பணிகளில் ஆயிரத்து 600 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஏன்?

இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.

வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ரோஜ்கார் மேளாவை பிரதமர் மோடி சமீபத்தில் தொடங்கி வைத்தார். இதில் 75 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு பணி நியமன கடிதங்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.




Next Story