ஜனாதிபதியாக பதவியேற்று முதல்முறையாக திருப்பதிக்கு செல்கிறார் திரவுபதி முர்மு
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு திருப்பதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
திருப்பதி,
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) என 2 நாட்கள் ஆந்திராவுக்கு வருகை தந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
திருப்பதிக்கு வரும் ஜனாதிபதி திரவுபதிமுர்முவுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.
அவர் திருமலையில் தங்கி ஓய்வெடுத்ததும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9.25 மணிக்கு வராஹ சுவாமி கோவில், வெங்கடாசலபதி கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு திருப்பதியை அடைகிறார்.
திருப்பதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு திருப்பதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story