டெல்லி தமிழ் கல்விக்கழகம் மேல்நிலைப்பள்ளியில் திருவள்ளுவர் சிலை - கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்
டெல்லி தமிழ் கல்விக்கழகம் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.
புதுடெல்லி,
டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள தமிழ் கல்விக்கழகம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தரை அடி உயரமும், ஆயிரத்து 500 கிலோ எடையும் கொண்ட இந்த திருவள்ளுவர் சிலையை, வி.ஜி.பி. உலக தமிழ் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் வழங்கினார்.
இந்த திருவள்ளுவர் சிலையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.
Related Tags :
Next Story