2020 மார்ச்சுக்கு பிறகு இது முதல்முறை: இந்தியாவில் நேற்று கொரோனாவுக்கு ஒருவர்கூட பலி இல்லை


2020 மார்ச்சுக்கு பிறகு இது முதல்முறை: இந்தியாவில் நேற்று கொரோனாவுக்கு ஒருவர்கூட பலி இல்லை
x

கோப்புப்படம்

இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு கடந்த 2020 மார்ச்சுக்கு பிறகு முதல்முறையாக ஒருவர்கூட பலியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நம் நாட்டில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட பலியாகவில்லை. 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு நேற்றுதான் கொரோனாவுக்கு ஒருவரும் பலியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 509 ஆக தொடருகிறது.

கொரோனா தினசரி பாதிப்பு நேற்று முன்தினம் ஆயிரத்துக்குள் (937) வந்தது. நேற்று இது மேலும் சரிந்து 625 ஆக பதிவானது. இந்த அளவு தொற்று பாதிப்பு குறைந்திருப்பது கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 9-க்கு பிறகு இதுவே முதல் முறை.

இதுவரை இந்த தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 61 ஆயிரத்து 516 ஆக அதிகரித்தது. நேற்று முன்தினம் 1 லட்சத்து 50 ஆயிரத்து 998 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. நேற்று தொற்றில் இருந்து 1,119 பேர் மீண்டனர்.

கொரோனாவில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 494 குறைந்தது. இதனால் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 21 ஆக குறைந்தது.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்டது.


Related Tags :
Next Story