எம்.பி பதவியில் இருந்து என்னை நீக்க நெறிமுறைகள் குழுவிற்கு அதிகாரம் இல்லை - மஹுவா மொய்த்ரா பேட்டி


எம்.பி பதவியில் இருந்து என்னை நீக்க நெறிமுறைகள் குழுவிற்கு அதிகாரம் இல்லை - மஹுவா மொய்த்ரா பேட்டி
x
தினத்தந்தி 8 Dec 2023 11:17 AM GMT (Updated: 8 Dec 2023 11:30 AM GMT)

அனைத்து விதிகளையும் இந்தக் குழு மீறியிருப்பதாக மஹுவா மொய்த்ரா ஆவேசமாக நாடாளுமன்ற வளாகத்தில் பேசினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக எழுந்த புகாரில், நெறிமுறைக் குழுவின் பரிந்துரையின் பேரில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ராவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மகுவா மொய்த்ராவின் பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்தநிலையில், மஹுவா மொய்த்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இது உங்கள் (பாஜக) முடிவின் ஆரம்பம். எம்.பி பதவியில் இருந்து என்னை நீக்க நெறிமுறைகள் குழுவிற்கு அதிகாரம் இல்லை. நெறிமுறைகள் குழு ஆதாரம் இன்றி செயல்பட்டுள்ளது. என்னை பேசவிடாமல் செய்வதன் மூலம் அதானி விவகாரத்தை திசை திருப்பிவிடலாம் என மோடி அரசு நினைக்கலாம். அதானி உங்களுக்கு முக்கியம்.

எதிர்க்கட்சிகளை நசுக்குவதற்கான ஆயுதமாக இந்தக் குழு மாறியுள்ளது. ரூல் புக்கில் உள்ள அனைத்து விதிகளையும் இந்தக் குழு மீறியுள்ளது. ஒரு பெண் எம்.பி.யை அடிபணியவைக்கும்படி நீங்கள் எவ்வளவு காலம் தொல்லை கொடுப்பீர்கள் என்றார்.


Next Story