வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 53 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை


வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 53 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை
x

வீட்டின் சுவர் ஏறி குதித்து தூங்கிக்கொண்டிருந்த 53 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டம் கிர்வான் பகுதியை சேர்ந்த 53 வயதான பெண் கடந்த சனிக்கிழமை இரவு தனது வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது, மதுபோதையில் அந்த வீட்டின் சுவர் ஏறி குதித்த 3 பேர் கொண்ட கும்பல் தூங்கிக்கொண்டிருந்த அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச்சென்றது.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் நடந்த தினத்தன்று காலை அந்த கிராமத்திற்கு அருகே உள்ள மலிஹ்ரா நிவாடா என்ற நகரின் பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த 3 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மதுபோதையில் வீடு ஏறி குதித்து தூங்கிக்கொண்டிருந்த 53 வயது பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட மட்டாதின், அகிலேஷ், நிக்லேஷ் ஆகிய 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.


Next Story