மராட்டியத்தில் 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம்


மராட்டியத்தில் 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம்
x

மராட்டிய மாநிலம் நாசிக்கில் ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

மும்பை,

மராட்டியத்தின் நாசிக் மாவட்டத்தில் நேற்று இரவு 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மிக அதிகமாக ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கம் நேற்று இரவு 08.58, 09.34 மற்றும் 09.42 மணி அளவில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் முறையே 3.4, 2.1 மற்றும் 1.9 என்ற அளவில் பதிவானது.

தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த நிலநடுக்கத்தின் மையம் நாசிக் மாவட்டத்தில் உள்ள திண்டோரி பகுதியில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு அல்லது பொருட்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.


Next Story