மேலும் 3 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அசாம் சென்றதால் சிவசேனா அரசுக்கு பின்னடைவு


மேலும் 3 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அசாம் சென்றதால் சிவசேனா அரசுக்கு பின்னடைவு
x

சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், தற்போது பா.ஜனதா ஆளும் அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் உள்ள ஓட்டலில் முகாமிட்டு உள்ளனர்.

கவுகாத்தி,

மராட்டியத்தில் மேலும் 3 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஷிண்டே முகாமிற்கு தாவியதால், உத்தவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில், உத்தவ் தாக்கரே அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், தற்போது பா.ஜனதா ஆளும் அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் உள்ள ஓட்டலில் முகாமிட்டு உள்ளனர்.

இந்த நிலையில், மராட்டியத்தில் ஆளும் மகாவிகாஸ் அகாடி அரசாங்கத்தில் அரசியல் ஸ்திரமின்மைக்கு மத்தியில் மேலும் 3 சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் கவுகாத்தியில் உள்ள ராடிசன் ப்ளூ ஹோட்டலை சென்றடைந்தனர்.

ஷிண்டே முகாமில் தற்போது 33 எம்எல்ஏக்கள் (கட்சியின் 55 எம்எல்ஏக்களில்) பக்கம் உள்ளனர். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படாமல் கட்சியைப் பிளவுபடுத்த இன்னும் நான்கு பேர் தேவை. ஷிண்டேவுடன் ஐந்து சுயேச்சை எம்எல்ஏக்களும் உள்ளனர்.

சிவசேனா கட்சியைச் சேர்ந்த பொதுப்பணித்துறை மந்திரி ஏக்னாத் ஷிண்டே தலைமையில் 46 எம்.எல்.ஏ.க்கள் உத்தவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இவர்கள் தற்போது அசாம் மாநிலம், கவுகாத்தி தங்கியுள்ளனர். உத்தவ் ஆட்சி நீடிக்க வேண்டுமாயின், கூட்டணியிலிந்து தேசியவாத காங்., காங்., 2 கட்சிகளை உத்தவ் வெளியேற்ற வேண்டும் என ஷிண்டே வலியுறுத்தி வருகிறார்.

இதற்கிடையே உத்தவ் தாக்கரேவை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்தனர். அப்போது, ஆட்சி கவிழாமல் தடுக்க, ஷிண்டேவை முதல்வராக்கலாம் என, உத்தவிடம் அவர்கள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உத்தவ் ஏற்கவில்லை. சட்டசபையை கலைத்து விடலாம் எனவும் சிவசேனா மூத்த நிர்வாகிகள் யோசனை தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நேற்று சிவசேனா எம்.பி.. சஞ்சய் ராவத் கூறியது, தற்போதைய சூழ்நிலையில் முதல்வர் பதவியிலிருந்து உத்தவ் விலகமாட்டார். சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிருபிக்க கவர்னரிடம் கோரிக்கை விடுக்கப்படும் என்றார். சிவசேனாவின் 17 எம்எல்ஏக்கள் மீண்டும் மும்பைக்கு வரத் தயாராக இருப்பதாக ஆளும் கூட்டணி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story