வதோதராவில் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து: 3 தொழிலாளர்கள் பலி


வதோதராவில் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து: 3 தொழிலாளர்கள் பலி
x

கோப்புப்படம்

வதோதராவில் உள்ள மருத்துவமனைக்கு 4 தொழிலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

வதோதரா,

குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் இன்று பிற்பகல் மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வதோதரா மாவட்டத்தின் பத்ரா தாலுகாவில் உள்ள ஏகல்பரா கிராமத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மற்றொரு தொழிலாளி காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக பத்ரா காவல் ஆய்வாளர் எல்.பி. தத்வி கூறுகையில், "ஒனிரோ லைப்கேர் ஆலையில் எரிவாயுக் குழாயில் இருந்து கசிவு ஏற்பட்டு, மதியம் 2 மணியளவில் வெடிவிபத்து ஏற்பட்டபோது, நான்கு தொழிலாளர்கள் அந்த இடத்தில் இருந்தனர். தொழிலாளர்கள் வதோதராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அவர்களில் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்" என்று அவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story