கேரளா: ஓடும் ரெயிலில் டிக்கெட் பரிசோதகரை கத்தியால் தாக்கிய நபர் கைது


கேரளா: ஓடும் ரெயிலில் டிக்கெட் பரிசோதகரை கத்தியால் தாக்கிய நபர் கைது
x

கேரளாவில் ஓடும் ரெயிலில் டிக்கெட் பரிசோதகரை கத்தியால் தாக்கிய நபர் கைதுசெய்யப்பட்டார்.

கோழிக்கோடு,

கேரளாவில் ஓடும் ரெயில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் கத்தியால் டிக்கெட் பரிசோதகரை தாக்கியுள்ளார். இந்த சம்பவமானது கோழிக்கோடு மாவட்டத்தில் வடகரா அருகே வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடைபெற்றுள்ளது.

டிக்கெட் பரிசோதனை செய்தபோது ஏற்பட்ட தகராறில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அந்த நபர் கத்தியால் தாக்கியதில், டிக்கெட் பரிசோதகரின் தலையில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, டிக்கெட் பரிசோதகர் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட நபரை ரெயில்வே போலீசார் கைதுசெய்தனர்.

1 More update

Next Story