காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காணாத வரை முடிவுகள் எதுவும் எட்டப்படாது - மெகபூபா முப்தி


காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காணாத வரை முடிவுகள் எதுவும் எட்டப்படாது - மெகபூபா முப்தி
x

காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காணாத வரை முடிவுகள் எதுவும் எட்டப்படாது என்று மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி இன்று ஸ்ரீநகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது, அரசியலமைப்பு வழியாக இந்தியாவுடன் காஷ்மீர் இணைக்கப்பட்டது. ஆனால், அரசியலமைப்பை பாஜக அழித்துவிட்டது. இந்தியா பாஜகவுக்கு சொந்தமானதல்ல. காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காணாதவரை எவ்வளவு வீரர்களை இங்கு அனுப்பினாலும் எந்த முடிவுகளும் எட்டப்படாது' என்றார்.


Next Story