திருப்பதி: ஆர்ஜித சேவை, அங்கப்பிரதட்சண டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆர்ஜித சேவை, அங்கப்பிரதட்சண டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.
திருமலை,
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நவம்பர் மாதத்துக்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஆன்லைன் ஒதுக்கீட்டின்படி திருமலை-திருப்பதி தேவஸ்தானம் இணையதளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் வெளியிடுகிறது.
டிசம்பர் மாதத்துக்கான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் இன்று மதியம் 3 மணியளவில் முன்பதிவு செய்யலாம். இந்த டிக்கெட்டுகள் இருப்புக்கு ஏற்ப முதலில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.
டிசம்பர் மாதத்துக்கான ஸ்ரீவாரி ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் மின்னணு டிப் பதிவுகள் (குலுக்கல் முறை) நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் கிடைக்கும். முன்பதிவு (திங்கட்கிழமை) காலை 10 மணி வரை நடைபெறும்.
பக்தர்கள் இந்தத் தகவலை கவனத்தில் கொண்டு, அதன்படி தரிசன டோக்கன்கள் மற்றும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.