திருப்பதி கோவிலில் 2022-23ம் ஆண்டிற்கான உண்டியல் வருமானம் - தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்


திருப்பதி கோவிலில் 2022-23ம் ஆண்டிற்கான உண்டியல் வருமானம் - தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்
x

கடந்த 2022-23ம் ஆண்டிற்கான உண்டியல் வருமானம் குறித்த தகவலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து ஏழுமலையான தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தும் பணம், நகை உள்ளிட்டவை முறைப்படி எண்ணப்பட்டு, அதன் கணக்கு விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கடந்த 2022-23ம் ஆண்டிற்கான உண்டியல் வருமானமாக கடந்த மார்ச் மாதம் வரை ஆயிரத்து 520 கோடியே 29 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனிடையே நடப்பு நிதியாண்டில் சுமார் 4 ஆயிரத்து 411 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பட்ஜெட்டுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


1 More update

Next Story