நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு விவாதத்தில் ருசிகரம்...! 1.6 லட்சம் மதிப்புள்ள கைப்பையை மறைத்து வைத்த பெண் எம்.பி.!


நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு விவாதத்தில் ருசிகரம்...! 1.6 லட்சம் மதிப்புள்ள கைப்பையை மறைத்து வைத்த பெண் எம்.பி.!
x

நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு விவாதத்தில் விலை உயர்ந்த கைப்பையை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி மஹுவா மறைத்தது வைரலாகி வருகிறது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது மேற்குவங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா தனது விலையுயர்ந்த கைப்பையை அருகில் வைத்த வீடியோ வெகு வைரலாக பரவி வருகிறது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த வரம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு குறித்து வாதங்கள் வைக்கப்பட்டு இருந்தது.

அந்த சமயம் , மேற்குவங்கத்தை சேர்ந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா தனது விலையுயர்ந்த கைப்பையை அருகில் வைத்து இருந்தார்.

அப்போது அவர் அருகில் ஒரு உறுப்பினர், பேசிக்கொண்டிருந்தனர். அந்த சமயம் தன் பக்கம் கேமிரா வருவதை கவனித்த மஹுவா மொய்த்ரா தனது விலையுயர்ந்த கைப்பையை கேமிராவுக்கு தெரியாத வண்ணம் தனது காலுக்கு இடையில் வைத்து விட்டார்.

அந்த கைப்பையை சமூகதளவாசிகள் ஆராய்ந்த போது, அதன் விலை 1.6 லட்சம் என தகவல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. விலைவாசி உயர்வை பற்றி பேசிக்கொண்டு இருக்கையில், இந்த மாதிரியான விலையுயர்ந்த பையை வைத்து இருந்தால் சர்ச்சை ஆகிவிடும் என மறைத்து வைத்தார் போலும் என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் அவர் மறைத்து வைத்த வீடியோ தான் அந்த பையை பற்றி பேச வைத்து விட்டது என்றே கூறவேண்டும் கூறுகின்றனர்.


Next Story