தக்காளி விலை உயர்வுக்கான காரணம் குறித்து மத்திய மந்திரி விளக்கம்


தக்காளி விலை உயர்வுக்கான காரணம் குறித்து மத்திய மந்திரி விளக்கம்
x
தினத்தந்தி 2 July 2023 7:03 AM GMT (Updated: 2 July 2023 7:10 AM GMT)

தக்காளியின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

புதுடெல்லி,

தக்காளியின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கோயம்பேடு காய்கறி சந்தையில் ரூ. 90-க்கு விற்ற தக்காளி, தற்போது மேலும் 10 ரூபாய் உயர்ந்து தற்போது ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் நாளை (திங்கட்கிழமை) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல இடங்களிலும் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல், தக்காளி விலை உயர்வு குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தக்காளியின் விலை ஒரு வாரமாக விலை உயர்ந்து கானப்படுகிறது. இதற்கு பருவமழையும் காரணம். அதனால் தக்காளியின் விலை அதிகரித்துள்ளது.

இமாச்சலபிரதேசம் மற்றும் கர்நாடகாவில் இருந்து தக்காளி வரத்து வரத்தொடங்கியவுடன் விலை குறையும். கடந்த ஆண்டு விலையை ஒப்பிட்டால், தற்போது பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விலை கட்டுக்குள் உள்ளது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story