நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் பதவியை எங்களுக்கு அளிக்காதது ஏன்? திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கேள்வி
கடந்த மாதம் நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் பதவிகள் மாற்றி அமைக்கப்பட்டன.
புதுடெல்லி,
கடந்த மாதம் நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் பதவிகள் மாற்றி அமைக்கப்பட்டன.காங்கிரஸ் கட்சி, முக்கியமான நிலைக்குழுக்களின் தலைவர் பதவியை இழந்தது. அதுபோல், உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துக்கான நிலைக்குழு தலைவர் பதவியை திரிணாமுல் காங்கிரஸ் இழந்தது. வேறு எந்த நிலைக்குழுவிலும் அக்கட்சிக்கு தலைவர் பதவி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:- 56 புதிய நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பா.ஜனதா அதை கேலிக்கூத்தாக்கி இருக்கிறது. சில எம்.பி.க்களை மட்டுமே கொண்டுள்ள தனது கூட்டணி கட்சிகளுக்கு தலைவர் பதவி அளித்துள்ளது. ஆனால், நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியாகவும், 2-வது பெரிய எதிர்க்கட்சியாகவும் உள்ள திரிணாமுல் காங்கிரசுக்கு ஒரு தலைவர் பதவி கூட அளிக்காதது ஏன்? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.