யூடியூப் பார்த்து மாத கணக்கில் திட்டம்; டெல்லியை உலுக்கிய மூவர் தற்கொலை - பகீர் தகவல்


தலைநகர் டெல்லியில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் புதுடெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 207வது வீட்டில் மஞ்சு (50 வயது) என்ற பெண் தனது இரு மகள்களான அன்ஷிகா, அன்கு ஆகிய 3 பேரும் தங்கள் வீட்டில் கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டனர்.

வீட்டின், கதவு ஜன்னல்கள் முழுவதும் பிளாஸ்டிக் கவரால் மூடிவிட்டு வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டுள்ளனர். மேலும், வீட்டில் விறகு அடுப்பில் தீ வைத்து புகையை உண்டாக்கியுள்ளனர். அந்த புகை சமையல் கியாஸ் சிலிண்டர் வாயுவுடன் சேர்ந்து கார்பன் மோனாக்சைடு என்ற விஷவாயுவாக மாறியுள்ளது. அந்த விஷத்தை சுவாசித்த மஞ்சு, அன்ஷிகா, அன்கு ஆகிய 3 பேரும் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.

மஞ்சுவின் கணவர் கடந்த ஆண்டு கொரோனாவால் உயிரிழந்த நிலையில் குடும்பத்தினர் மிகவும் கவலையுடனும், நிதி நெருக்கடியிலும் இருந்துள்ளனர்.

இந்நிலையில், மூவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்கொலைக்கு முன்னர் எழுதி வைத்த கடித்ததை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அந்த கடிதத்தில் அதிர்ச்சி தகவல் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக போலீசார் தரப்பில் கூறுகையில், மஞ்சு மற்றும் அவரது மகள்கள் அன்ஷிகா, அன்கு ஆகிய 3 பேரும் தற்கொலை செய்வது குறித்து பல மாதங்களாக திட்டமிட்டுள்ளனர். கடினமான முறையில் தற்கொலை செய்துகொள்வது எப்படி? என யூடியூப் பார்த்துள்ளனர். எந்த வகையிலும் தங்கள் உயிரை பிறர் காப்பாற்றிவிடக்கூடாது என்பதற்காக கடினமான முறையில் தற்கொலை தற்கொலை செய்துகொள்வது எப்படி என்பது குறித்து யூடியூபில் பார்த்துள்ளனர்.

வீட்டில் இருந்து 2 செல்போன்கள், 9 தற்கொலை கடிதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதகவும் இவை ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதகாவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை செய்துகொண்டவர்களில் ஒருவர் எழுதி வீட்டின் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த கடிதத்தில், கார்பன் மோனாக்சைடு வீடு முழுவதும் உள்ளது. எங்களை காப்பாற்ற முயற்சிக்காதீர்கள். எனென்றால் நாங்கள் வாழ விரும்பவில்லை. எங்களை காப்பாற்றுவதால் எங்கள் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும். அது வாழ்வது மற்றும் சாவதை விட கொடூரமானது. கெஞ்சி கேட்டுக்கொள்கிறோம். எங்களை காப்பாற்ற முயற்சிக்காதீர்கள். உங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள்' என கடித்தத்தில் எழுதப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

யூடியூப் பார்த்து ஒரேகுடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூரமான முறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க... கதவு, ஜன்னல் பிளாஸ்டிக் கவரால் அடைப்பு - வீடு முழுக்க விஷ வாயு செலுத்தி தாய்-மகள்கள் தற்கொலை; பரபரப்பு கடிதம்


Next Story