திரிபுரா சட்டசபை இடைத்தேர்தல்; பா.ஜ.க.-3, காங்கிரஸ்-1 முன்னிலை
திரிபுரா சட்டசபை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளன.
அகர்தலா,
திரிபுரா சட்டசபைக்கான 4 தொகுதிகளுக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகிறது. இதில், பா.ஜ.க. 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளன.
இதன்படி, பா.ஜ.க. வேட்பாளர்களான முறையே மாணிக் ஷா டவுன் பர்தோவாலி தொகுதியிலும், மலினா தேப்நாத் ஜுபராஜ்நகர் தொகுதியிலும் மற்றும் ஸ்வப்னா தாஸ் (பால்) சுர்மா தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றனர்.
திரிபுராவின் தலைநகராக உள்ள அகர்தலா சட்டசபை தொகுதியில் போட்டியிட்டவர்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர் சுதீப் ராய் பர்மன் முன்னிலை பெற்றுள்ளார். இதனை இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story