காங்கிரஸ் அலுவலகம் மீது பா.ஜனதாவினர் தாக்குதல் - ராகுல்காந்தி கண்டனம்


காங்கிரஸ் அலுவலகம் மீது பா.ஜனதாவினர் தாக்குதல் - ராகுல்காந்தி கண்டனம்
x

Image Courtacy: PTI

திரிபுரா இடைத்தேர்தல் முடிவுகளை தொடர்ந்து காங்கிரஸ் அலுவலகம் மீது பா.ஜனதாவினர் தாக்குதல் நடத்தியதற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

திரிபுராவில் 4 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆளும் பா.ஜனதா 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. தலைநகர் அகர்தலாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

இதற்கிடையே, அகர்தலாவில் காங்கிரஸ் அலுவலகம் முன்பு பா.ஜனதா-காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. கற்களும் வீசப்பட்டன. இதில், மாநில காங்கிரஸ் தலைவர் பிரஜித் சின்கா உள்பட 19 பேர் காயமடைந்ததாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது பா.ஜனதா குண்டர்கள் நடத்திய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். மக்கள் எங்களுடன் உள்ளனர். இந்த தாக்குதலை தடுக்காமல் போலீசார் வேடிக்கை பார்த்தது வெட்கக்கேடு. அந்த குண்டர்களை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story