மோடியின் படத்தை சிலிண்டரில் ஒட்டிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர்..! நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி
மத்திய அரசு அதிக மானியம் கொடுக்கும் போது, நியாயவிலைக் கடைகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லாதது ஏன்? என நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் சென்ற மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அங்குள்ள ஒரு நியாயவிலைக் கடையை ஆய்வு செய்தார். அப்போது மத்திய அரசு அதிக மானியம் கொடுக்கும் போது, நியாயவிலைக் கடைகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லாதது ஏன்? என மாவட்ட ஆட்சியரை கடிந்து கொண்டார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், நிர்மலா சீதாராமனுக்கு தெலங்கானா ராஷ்ட்டிரிய சமிதி கட்சியினர் பதிலடி கொடுக்கும் வகையில் சிலிண்டரில் மோடியின் படத்தை ஒட்டியுள்ளனர். இந்த வீடியோவும் வைரலாக பரவி வருகிறது.
இது தொடர்பான விடியோவை தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் நிர்வாகி கிரிஷன் பகிர்ந்திருப்பதோடு, பிரதமர் மோடியின் புகைப்படத்தைத் தானே கேட்டீர்கள், இங்கே இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகப்பரவி வருகிறது.
Related Tags :
Next Story