தெலுங்கானாவில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு


தெலுங்கானாவில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
x

கோப்புப்படம்

தெலுங்கானாவில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

வாரங்கல்,

தெலுங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தில் உள்ள யெல்லாண்டு என்ற கிராமத்தில் ஒரு ஆட்டோ வாரங்கலில் இருந்து தோரூருக்கு நேற்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி, ஆட்டோ மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் தெரிந்த போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரும் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் தேன் விற்பனையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் என தெரிய வந்துள்ளது.


Next Story