மகள்களை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர தந்தை கைது


மகள்களை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர தந்தை கைது
x

பஞ்சாபில் மகள்களை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.

சண்டிகார்,

பஞ்சாபை சேர்ந்தவர் வித்யா ராம். இவருக்கு பூனம் சர்மா என்பவருடன் திருமணமாகி 10 மற்றும் 16 வயதில் 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் பிரச்சனை தீவிரமாகி கொள்ளிக்கட்டையை கொண்டு தன் மனைவியை வித்யாராம் தாக்கினார்.

ஆனாலும் ஆத்திரம் தீராமல் தன் 2 மகள்கள் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். அவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் தீக்காயமடைந்த சிறுமிகளை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து பூனம் சர்மா கொடுத்த புகாரின் பேரில் வித்யாராமை போலீசார் கைது செய்தனர்.


Next Story