ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியில் தலிபான்கள் உருவாகியுள்ளனர் - பாஜக தலைவர் ராஜ்யவர்தன் ரத்தோர் குற்றச்சாட்டு


ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியில் தலிபான்கள் உருவாகியுள்ளனர் - பாஜக தலைவர் ராஜ்யவர்தன் ரத்தோர் குற்றச்சாட்டு
x

ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசின் திருப்திபடுத்தும் முறை அரசியல், அம்மாநிலத்தில் இதுபோன்ற தலிபான்களை உருவாக்கியுள்ளது

புதுடெல்லி,

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடை நடத்தி வந்த நபர், கொடூர கொலையாளிகளால் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வீடியோ வெளியாகி பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அனைவரும் அமைதி காக்க வேண்டும் என ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் வலியுறுத்தி உள்ளார். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து, பாஜக தலைவர் ராஜ்யவர்தன் ரத்தோர் கூறுகையில்,

"உதய்பூர் சம்பவம் தனிமைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல, இது போன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடக்கின்றன. அம்மாநிலத்தில் எம்.எல்.ஏ.க்களை கண்காணிக்க போலீஸ் மற்றும் உளவுத்துறை பயன்படுத்தப்படும் விதம், மேலும், முதல் மந்திரி மற்றும் அவரது அமைச்சர்கள் அறிக்கைகள் கொடுக்கும் விதம், இது போன்ற சம்பவங்கள் நடக்க காரணமாக அமைகின்றன.

மக்களின் குறைகளை அரசு கண்டுகொள்வதே இல்லை.மாநில அரசு திறமையற்றது, அவர்கள் சும்மா அமர்ந்திருக்கிறார்கள். மனரீதியாக, முதல் மந்திரி டெல்லியில் இருக்கிறார், மறுபுறம் அம்மாநில மக்கள் பின்விளைவுகளை எதிர்கொள்கின்றனர்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசின் திருப்திபடுத்தும் முறை அரசியல், அம்மாநிலத்தில் இதுபோன்ற தலிபான்களை உருவாக்கியுள்ளது."

இவ்வாறு அவர் குற்றம்சாட்டினார்.

இதற்கிடையே, இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story