ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியில் இருந்து நீக்கம் - உத்தவ் தாக்கரே அதிரடி
ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா கட்சியில் இருந்து நீக்கி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளார். இதன் மூலம் மராட்டியத்தின் புதிய முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றுள்ளார். துணை முதல்-மந்திரியாக பாஜக-வின் தேவேந்திரபட்னாவிஸ் பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா கட்சியில் இருந்து நீக்கி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story