யூ.ஜி.சி. நெட் தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என அறிவிப்பு


யூ.ஜி.சி. நெட் தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என அறிவிப்பு
x

யூ.ஜி.சி. நெட் தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 21-ந் தேதி முதல் மார்ச் 10-ந் தேதி வரை நடைபெறும் என பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தேர்வு (UGC-NET) என்பது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வாகும். இதில் தேர்ச்சி பெறுவதன் மூலம் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவிப்பேராசியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

அந்த வகையில் 2023-ம் ஆண்டிற்கான நெட் தேர்வு வருகின்ற பிப்ரவரி 21-ந் தேதி முதல் மார்ச் 10-ந் தேதி வரை நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் மமிடலா ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்தியப் பல்கலைக்கழகங்களில் ஜூனியர் ரிசர்ச் பெலோஷிப் மற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கான யூ.ஜி.சி. நெட் தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 21-ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும்.

இந்த தேர்வுக்கு டிசம்பர் 29 தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 17-ந் தேதி (மாலை 05:00 மணி) வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு: ugcnet.nta.nic.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம் என்று தேர்வு முகமை தெரிவித்துள்ளது.


Next Story