டெல்லியில் மத்திய மந்திரி மீனாட்சி லேகியுடன் உக்ரைன் மந்திரி சந்திப்பு


டெல்லியில் மத்திய மந்திரி மீனாட்சி லேகியுடன் உக்ரைன் மந்திரி சந்திப்பு
x
தினத்தந்தி 11 April 2023 10:13 AM GMT (Updated: 11 April 2023 10:17 AM GMT)

உக்ரைனுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளதாக மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் துணை வெளியுறவுத்துறை மந்திரி இந்தியாவுக்கு எமின் தபரோவா, 4 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். உக்ரைனில் போர் நடைபெற்று வரும் நிலையில், அவரது வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு வந்துள்ள எமின் தபரோவா, இந்திய வெளியுறவுத் துறை இணை மந்திரி மீனாட்சி லேகி, தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்தது.

அதன்படி டெல்லியில் இன்று மத்திய மந்திரி மீனாட்சி லேகியை, எமின் தபரோவா நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து மீனாட்சி லேகி தனது டுவிட்டர் பக்கத்தில், "இருதரப்பு மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். கலாச்சார உறவுகள் மற்றும் பெண்கள் அதிகாரம் ஆகியவை விவாதத்தில் இடம்பெற்றன. உக்ரைனுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.



Next Story