யாசின் மாலிக்குக்கு ஆதரவாக கருத்து: இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளுக்கு இந்தியா கண்டனம்


யாசின் மாலிக்குக்கு ஆதரவாக கருத்து:  இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளுக்கு இந்தியா கண்டனம்
x

ஓஐசி எனப்படும் இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள், யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை வழங்கியதை விமர்சித்திருந்தது.

புதுடெல்லி,

பயங்கராவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை விதித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 10 குற்றங்களில் அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஓஐசி எனப்படும் இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள், யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை வழங்கியதை விமர்சித்திருந்தது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இவ்விவகாரம் குறித்து கூறியிருப்பதாவது;-

"யாசின் மாலிக்குக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக இந்தியாவை விமர்சித்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தெரிவித்த கருத்தை ஏற்க முடியாது.இந்த கருத்தின் மூலம், யாசின் மாலிக் செய்த பயங்கரவாத செயல்களுக்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மறைமுகமாக ஆதரவு அளித்துள்ளது. பயங்கரவாதத்தை உலகம் சகித்து கொள்ளவே கொள்ளாது. அதை நியாயப்படுத்த வேண்டாம் என கேட்டு கொள்கிறோம்" என்றார்.


Next Story