பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்


பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்
x
தினத்தந்தி 12 Sep 2023 11:42 AM GMT (Updated: 12 Sep 2023 2:30 PM GMT)

பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரும் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 18-ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலும், 19-ம் தேதி முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திலும் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

5 மாநில தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல் வருவதையொட்டி பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை நடந்த இக்கூட்டத்தில் கேஸ் சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story