அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு தற்காலிக மருத்துவமனைகள்! மத்திய சுகாதார அமைச்சகம் நடவடிக்கை


அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு தற்காலிக மருத்துவமனைகள்! மத்திய சுகாதார அமைச்சகம் நடவடிக்கை
x

அந்தந்த மாநிலங்களில் உள்ள மருத்துவர்கள் குழுக்களை ஜம்மு காஷ்மீர் அரசுக்கு உதவியாக அனுப்பி வைக்க மாநில அரசுகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

அமர்நாத் யாத்திரையை பிரமாண்டமாக நடத்த மத்திய சுகாதார அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் வழிகாட்டுதலின்படி, சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி, பக்தர்களுக்கு அமர்நாத் யாத்திரையை சீரமைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

அமர்நாத் யாத்திரை ஜூன் 30, 2022 இல் தொடங்கி ஆகஸ்ட் 11, 2022 அன்று முடிவடையும். பல மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு வசதியாக அந்தந்த மாநிலங்களில் உள்ள மருத்துவர்கள் குழுக்களை ஜம்மு காஷ்மீர் அரசுக்கு உதவியாக அனுப்பி வைக்க கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. அதற்கு தேவையான ஏற்பாடுகள் குறித்தும் மாநில அரசுகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டிஆர்டிஓ உதவியுடன், பல்டால் மற்றும் சந்தன்வாரியில் உள்ளரங்க வசதிகளாக 50 படுக்கைகள் கொண்ட இரண்டு மருத்துவமனைகள் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story