மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று மைசூரு வருகை


மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று மைசூரு வருகை
x
தினத்தந்தி 9 Feb 2024 11:45 PM GMT (Updated: 9 Feb 2024 11:45 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மைசூருவில் பா.ஜனதா தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுடன் அமித்ஷா ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.

மைசூரு,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மைசூரு வருகிறார். இன்று (சனிக்கிழமை) இரவு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மைசூரு வருகிறார். பின்னர் இரவு ரேஸ்கோர்ஸ் பகுதியில் நட்சத்திர ஓட்டலில் அமித்ஷா தங்குகிறார். மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணியளவில் சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு மத்திய மந்திரி அமித்ஷா கார் மூலம் செல்கிறார். அங்கு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜையை அவர் நடத்துகிறார். பின்னர் மதியம் 2 மணியளவில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி மைசூருவில் பா.ஜனதா தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுடன் அமித்ஷா ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். பின்னர் சுத்தூரில் நடைபெற்று வரும் திருவிழாவில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொள்கிறார். இதையடுத்து அன்றைய தினம் இரவு மைசூருவில் இருந்து டெல்லிக்கு தனி விமானம் மூலம் அமித்ஷா புறப்பட்டு செல்கிறார். மைசூருவுக்கு மத்திய மந்திரி அமித்ஷா வருகை தருவதால் மண்டகள்ளி விமான நிலையம், நட்சத்திர ஓட்டல், சாமுண்டி மலை, மற்றும் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.


Next Story